Friday, September 28, 2012

இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது


இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது



அமெரிக்காவில் இருந்து வெளியிடப்பட்ட திரைப்படம் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட அமெரிக்காவைக் கண்டித்து இந்தியா, லிபியா, பாகிஸ்தான், எகிப்து போன்ற பல நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன.
 
இதற்கிடையே இந்த திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலரை நான் பரிசாகத் தருவேன் என்று பாகிஸ்தான் மந்திரிகுலாம்அகமது பிலோர் அறிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால், சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்தவரை போலீசார் தேடி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த படத்தை தயாரித்த நகோலா(55) என்பவரை கலிபோர்னியா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.
 
இதற்கு முன் நகோலா தனது பெயரை பலமுறை மாற்றி, பல்வேறு பெயர்களில் கிரெடிட் கார்டுகள் பெற்று முறைகேடு செய்துள்ளார். போலியான வங்கிக் கணக்கு தொடங்கி பல்லாயிரக்கணக்கான டாலர் கடன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நகோலா, 2011ல் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட், ஈரானில் Gmail க்கு தடை!, கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்!

ப்ரேசில் நாட்டு Google தலைவருக்கு பிடி வாரண்ட், ஈரானில் Gmail க்கு தடை!, கொட்டு வாங்க ஆரம்பித்த கூகுள்! 

பிடி வாரண்ட பிறப்பிக்க பட்ட Google உயர் அதிகாரி Fabio Jose Silva Coelho
ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் Reza Taqipour
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.  10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை  Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகும் அந்த வீடியோ Youtube ல் இருந்தால் அந்த வீடியோ இருக்கும்  ஒவ்வொரு நாளைக்கும் Google நிறுவனம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Islamic Union என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதே போன்று தேர்தல் தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவைநீக்குமாறு ப்ரேசில் நாட்டு தேர்தல் நீதிமன்றம் சமீபத்தில் Google க்கு உத்தரவிட்டது, ஆனால் வழக்கம் போல இது பேச்சு சுதந்திரம் எனக் கூறி Youtube நீக்க மறுத்து விட்டது. ஒபாமா கி்ட்டதான் இந்த மாறி பேச்சுல்லாம் செல்லும் , ஆனால் ப்ரேசில் நாட்டு  நீதிமன்றம் ஆத்திரமடைந்து சமீபத்தில் ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவருக்கு (Head of Google operation in Brazil) பிடி வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து புதன் கிழமை (26-9-2012) ப்ரேசில் நாட்டு Google நிறுவனத்தின் தலைவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ”நான் வழக்கிற்கு முழுவதுமாக ஒத்துழைக்கின்றேன் நீதிமன்றத்தில் ஆஜராகின்றேன் என அவர் எழுத்துபூர்வமாக அவர் எழுதி கொடுத்ததை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.
இதே போன்று ஈரான் நாட்டு அரசு  தற்போது Gmail க்கு ஈரான் நாட்டில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டு தொலை தொடர்பு துறை அமைச்சர் , நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து Google நிறுவனத்தில் Gmail சேவை ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் எனக் தெரிவித்துள்ளார்.

Monday, September 24, 2012

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு: பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன. 

பாகிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சினிமா படம் தயாரித்த அமெரிக்கர் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி குலாம் அகமது பிலோர் ரூ.55 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார். பெஷாவரில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 




முகமது நபிகளை இழிவு படுத்தி சினிமா படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவரை கொல்பவருக்கு ரூ.55 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்) பரிசு தொகை வழங்கப்படும். மதத்தை அவமதிப்பவருக்கு இதுதான் சரியான தண்டனையாகும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும் என்று தெரிவித்தார். 

மேலும் அவர் கூறும் போது, ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம் என எனக்கு தெரியும். அதுகுறித்து பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கோர்ட்டில் என்மீது வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் இதுபோன்ற விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.

இதற்கிடையே மந்திரி பிலோரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கர் தலைக்கு பரிசு தொகை அறிவித்துள்ள மந்திரி குலாம்அகமது பிலோர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியான அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர். இக்கட்சி கைபர்- பக்துன்கவா மாகாணத்தில் செல்வாக்குடன் திகழ்கிறது.

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்


சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது. 


இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த கப்பல் உக்ரைனுக்கு சொந்தமானது. 2002-ம் ஆண்டு அந்த கப்பலை சீனா விலைக்கு வாங்கி புதுப்பித்தது. 

சீனாவில் உள்ள டேலியன் கப்பல் கட்டும் துறையில் பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணி நடந்து முடிந்து, இப்போது சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

கப்பலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக பயன்படுத்த போவதாக சீனா கூறியுள்ளது. ஆனால் சீனா சமீபகாலமாக பக்கத்து நாடுகளான ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்சுடன் கடற் நிலபரப்பு தொடர்பாக மோதல் போக்கை கடைப் பிடித்து வருகிறது. எனவே இந்த கடல் பகுதியில் கண்காணிப்பதற்காகவும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் கப்பலை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கப்பல் 990 அடி நீளம் கொண்டதாகும். 36 விமானங்கள், 16 ஹெலிகாப்டர்களை இதில் நிறுத்தி வைக்கலாம். 3 ஆயிரம் வீரர்கள் கப்பலில் தங்கியிருக்கும் வசதி உள்ளது. ரஷியாவிடம் இந்த கப்பல் இருந்தபோது வர்யாக் என்று பெயரிடப்பட்டு இருந்தது. சீனா இதற்கு ஷிலேங் என்று பெயரிட்டு உள்ளது.

Monday, September 17, 2012

சவூதியில் பஸ்- லொறி மோதி தீப்பிடித்தது: இந்தியர்கள் உள்பட 35 பேர் பலி


துபாயின் ஜூபைல் மாகாணத்தில் இன்று பேருந்தும்,ஆயில் டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 35 பேர் இறந்தனர்.


சவூதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான நாசல் அல் ஹாஜிரி என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இந்தியாநேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சென்று வர கம்பெனி சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இன்று பணி முடிந்து தொழிலாளர்கள் அந்த பேருந்தில் வீடு திரும்பினர். ஜூபைல் நகருக்கு அருகில் சென்றபோது  அந்த பேருந்துஆயில் டேங்கர் லாரியில் மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்தன. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் பலர் தீயில் கருகினர்.


இவர்களில் 10 இந்தியர்கள் உள்பட 35 பேர் உடல் கருகி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும்12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
Blogger Wordpress Gadgets