Wednesday, April 11, 2012

சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம்: 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை


சென்னை, ஏப். 11 -
 
சென்னையில் இன்று மதியம் 2.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த சென்னை வாசிகள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர்.
 
தலைமைச்செயலகம்,  உயர்நீதிமன்றம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் இருந்தோர்  அனைவரும் உடனடியாக சாலையில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னை பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து  இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன
Blogger Wordpress Gadgets