Saturday, February 25, 2012

போலியோ நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது


போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தால்தான் உண்டு என்றில்லாமல் உள்நாட்டிலேயே போலியோநோய் (இளம்பிள்ளை வாதம்) உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை உலக சுகாதார நிறுவனம் நீக்கிவிட்டதாக அந்நாடு கூறுகிறது.
போலியொ ஒழிப்பு தொடர்பில் கடந்த ஆண்டில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத்தை இது பிரதிபலிப்பதாக இந்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே போலியோ நோய் உள்ள நாடுகளின் பட்டியலில் எஞ்சியுள்ள உலக நாடுகள் என்றால், இனி அது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டும்தான்.
அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் எவருக்குமே புதிதாக போலியோ வராமல் இருந்தால், இந்தியாவை முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட ஒரு நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்


ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்
கடும் வறட்சியால் 50 லட்சம் பேர் பட்டினி: நகரபகுதிக்கு சென்று பிச்சை எடுக்கும் அவலம்
நைஜர்,
ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடு நைஜர். இங்கு அடிக்கடி வறட்சி ஏற்படுவதும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.   இப்போது மீண்டும் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக நைஜர் நாட்டில் அக்டோபர் மாதம் அறுவடை நடக்கும். கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் சரியான விளைச்சல் இல்லை. மேலும் வெட்டுக்கிளி தாக்குதலாலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
 எனவே மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் உணவு கிடைக்காமல். 50 லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது 2 நாளைக்கு ஒரு தடவை தான் சாப்பிடுவதாக கூறுகின்றனர்.
 
 கிராம பகுதிகளில் உணவு கிடைக்காத மக்கள் நகரங்களுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காமல் பல குழந்தைகள் நோயால் அவதிப்படுகின்றன. நிலைமை மோசமாக இருப்பதை அடுத்து ஐ.நா குழு ஒன்று அவசரமாக நைஜர் நாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
 
உடனடியாக நிலைமையை சமாளிக்க ரூ 4 ஆயிரம் கோடி தேவை என்று ஐ.நா கூறியிருக்கிறது. எனவே சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. நைஜர் நாட்டில் கடந்த 10 ஆண்டில் கடும் பட்டினி ஏற்பட்டு இருப்பது இது 3-வது தடவையாகும்.

Friday, February 24, 2012

தந்தங்களுக்காக கேமரூனில் 458 யானைகள் கொலை


கேமரூன் நாட்டின் வடபகுதியில் இதுவரை இல்லாத வகையில் தந்தங்களுக்காக, கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான யானைகளை துப்பாக்கிதாரிகள் கொன்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் எண்ணியிருந்ததை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைய வாரங்களில் மட்டும் 458 யானைகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்குள்ள பௌபா இன்ஜெடா தேசிய வன்விலங்கு சரணாலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தந்தங்களுக்காக மத்திய ஆப்ரிகாவில் யானைகள் கொல்லப்படுவது சாதாரமான ஒரு விஷயம்தான். ஆனால் இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் இந்த அளவுக்கு யானைகள் கொல்லப்படுவதை தாங்கள் இதுவரை பார்த்தது இல்லை என்று பிராணிகள் நல அமைப்பினர் தெரிவிக்கிறார்கள்.
தற்போது கேமரூனின் வடபகுதியில் வறண்ட வாநிலை நிலவும் காலம் என்பதால், வேட்டைக்காரர்களுக்கு யானைகளை கொல்வதற்கு சரியான நேரமாக அமைந்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்துள்ளதால், வேட்டைக்காரர்களின் கவனம் கேமரூன் நாட்டிலுள்ள இந்த இன்ஜெடா சரணாலயத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதற்கு சூடான் மற்றும் சாட் நாட்டிலுள்ள குற்றக்குழுக்கள் மீதே பிராணிகள் நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சர்வதேச பிராணிகள் நலச் சங்கத்தின் பேச்சாளரான சிசிலர் பியேன்வெனு இந்தக் குழுக்கள் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்புடன் பெருமளவில் அதிநவீன ஆயுதங்களுடன் செயல்படுகிறார்கள் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இவர்கள் குதிரைகளில் வந்து சிறு குழுக்களாக பிரிந்து யானைகளை வேட்டையாடிவிட்டு விரைவாக சென்று விடுகிறார்கள் என்றும் சிசிலர் பியேன்வெனு கூறுகிறார்
குட்டியானைகள் உட்பட தற்போது 458 யானைகளின் சடலங்களை தாங்கள் கண்டுபிடித்திருந்தாலும், யானைகள் உலாவும் பகுதி மிகப் பெரிய அளவிலானது என்பதால், மேலும் கூடுதலான யானைகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் கேமரூன் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கேமரூனின் வடபகுதி முழுவதிலும் ஆயிரத்துக்கும் குறைவான யானைகளே இருப்பதாக கருத்தப்படும் நிலையில், இந்தப் பகுதியில் உள்ள யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
கிழக்கு ஆசியாவில் அதிலும் குறிப்பாக சீனாவில் யானைத் தந்தங்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளதற்கும், கேமரூனில் யானைகள் கொல்லப்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்று பிராணிகள் நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்


குரான் எரிப்பைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள்
குரான் எரிப்பைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இன்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய போது, ஆப்கானிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால் இந்த இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்துமாறு உள்ளுர் பள்ளிவாசல் ஒன்று அழைப்பு விடுத்தது என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு மாகாணங்களில் குரான் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி சாவு


சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி சாவு
அலபாமா, 

சாக்லேட் சாப்பிட்டதால் 3 மணி நேரம் ஓட வைத்து தண்டிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியை சேர்ந்தவள் சவன்னா ஹார்டின். 9 வயது சிறுமி. 3-வது வகுப்பு படித்து வந்தாள்.
 
இவள் தனது சித்தி ஜெசீகாமே ஹார்டின் (27), பாட்டி ஜாய்சி ஹார்டின் காராட் (47) ஆகியோருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டு விட்டாள். இதை அறிந்த இருவரும் அவளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தனர்.
 
அதாவது தனது வீட்டை சுற்றி தொடர்ந்து 3 மணி நேரம் ஓடும்படி கட்டாயப் படுத்தினர். அதை இருவரும் உட்கார்ந்தபடி ரசித்து கொண்டிருந்தனர். இதனால் ஓடி களைத்த சவன்னா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நாக்கு வறட்சியால் திடீரென தனது பாட்டியின் காலடியில் மயங்கி விழுந்தாள்.
 
உடனே அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சவன்னாவின் பாட்டி ஜாய்சீயையும், சித்தி ஜெசீகாமேவையும் கைது செய்தனர்.

பறக்கும் ஆசையில் கால்களை முறித்துக் ​கொண்ட அதிசய மனிதர்


 எனினும் அதில் பெரும்பகுதியினர் இயற்கையின் படைப்பில் அது பறவைகளுக்கே உரிய சிறப்பம்சம் என புரிந்து கொண்டு அந்த ஆசையிலிருந்து ஒதுங்குகின்றார்கள்.
ஆனால் சிலர் எப்படியாவது பறந்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகவே இந்த செய்தி அமைகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான ஜெப் கோர்லிஸ் என்பர் இந்த வினோத ஆசையால் சிறகுகள் போன்ற உடை ஒன்றை வடிவமைத்து சுமார் 200 அடிகள் உயரமான மலையிலிருந்து குதித்திருக்கின்றார்.
மேலும் மணித்தியாலத்திற்கு 120 மைல்கள் என்ற வேகத்தில் தரையை நோக்கி வந்த அவரின் இரு கால்களும் முறிவடைந்தமையால் அதே வேகத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Wednesday, February 22, 2012

ஈரானில் கூகுள்,யாஹு போன்ற வெப்சைட்டுக்களை பொதுமக்கள் பார்க்க திடீர் தடை.


Feb
23
 


Iran Government banned Google and Yahoo websites.,

பார்லிமென்ட் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெப்சைட்களை
மக்கள் பார்க்க ஈரானில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள், யாஹூ
உள்ளிட்ட வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரானில்
2009-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. 2-வது முறையாக 
முகமது அகமதிநிஜாத் வெற்றி பெற்று அதிபரானார்.
முறைகேடாக தேர்தல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறின. 
4 ஆண்டு பதவிக்காலம் முடிவதை அடுத்து, அங்கு அதிபர் 
தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கிடையில், 
நாட்டில் புரட்சி வெடித்து குடியரசு நாடாக மாறியதன்
33-வது ஆண்டு விழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதை விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், 
அதிரடி நடவடிக்கையாக வெப்சைட்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எச்டிடிபிஎஸ் என தொடங்கும் எல்லா வெப்சைட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 
கூகுள், யாஹூ மட்டுமின்றி இன்டர்நெட் பேங்கிங் சேவைகூட பெற முடியாமல் 
மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஈரான் போர் ஒத்திகை? இஸ்ரேல் ஜனாதிபதி , ஒபாமா விரைவில் சந்திப்பு.


ஈரானில் அணுசக்தித் திட்டங்களை ஆராய சர்வதேச அணுசக்தி
ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்ற நிலையில் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசவுள்ளார்.

எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பொதுமக்களுக்கு அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது ஈரான்.


பயிற்சியில் ஈடுபடும் ஈரானிய இராணுவத்தினர் - வீடியோ


ஈரானிய இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றமையை
அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

அவற்றின் இணைப்பு இங்கே

சுட்டு வீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை வெளியிட்டது ஈரான்.



அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமொன்று ஈரான் இராணுவத்தினரால் சுட்டு
வீழ்த்தப்பட்டிருப்பதாக ஈரான் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய வான்வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குறித்த அமெரிக்க விமானம் பறந்ததாகவும், இது உளவு பார்ப்பதற்காக நாட்டுக்குள் வந்திருக்கலாம் எனவும் ஈரானிய இராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன. சுட்டுவீழ்த்தப்பட்ட குறித்த விமானம் சேதங்களுடன், ஈரான் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.  இதேவேளை கடந்த ஜூலை மாதமும் அமெரிக்க வேவு விமானம் ஒன்றை தாம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அணு ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்த இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளடங்களான வல்லாதிக்க நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வந்தன.
ஈரான் ஆணு ஆயுதத் தயாரிப்பில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணு சக்தி அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 இந்நிலையில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து இங்கிலாந்து தனது நாட்டிலிருந்து ஈரானிய உயரதிகாரிகளை வெளியேற்றிருந்தது.

அதே போன்று கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள தூதரக அதிகாரிகளை ஜெர்மனி தனது தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது. தமது நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்க வேவுவிமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும் இவற்றை பென்டகன் மறுத்திருந்த நிலையில் தற்போது பிடிபட்ட உளவு விமானத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஈரான்.


இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

குரான் எரிப்பு தொடர்பாகப் போராட்டம்



பாக்ராம் நகரில் நடைபெற்ற போராட்டம்
பாக்ராம் நகரில் நடைபெற்ற போராட்டம்
முஸ்லிம்களின் புனித நூலான குரானின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்குள்ள அமெரிக்க கமாண்டர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இஸ்லாமிய மதப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு முறையற்ற வழி கடைபிடிக்கப்பட்டது என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதாக ஜெனரல் ஜோன் அல்லென் கூறினார்.
இந்தப் பொருட்களை தாலிபன் கைதிகள் தமக்கிடையே தகவல்களை கைமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தியதால் அவர்களிடமிருந்து அமெரிக்கப் படையினர் அவற்றைப் பறிமுதல் செய்ததாக மூத்த ஆப்கன் அதிகாரிகள் இருவர் பிபிசியிடம் கூறினர்.
இந்த விடயம் காரணமாக காபூலின் வடக்கேயுள்ள பாக்ராம் விமானப்படைத் தளத்துக்கு வெளியே பெரும் போராட்டமொன்று நடந்தது.
இந்தப் போராட்டத்தில் கூடியிருந்தவர்களைக் கலைக்கும் நோக்கில் சர்வதேசப் படையினர் ரப்பர் குண்டுகளை சுட்டதில் ஒருவர் காயமடைந்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஐந்துபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குரான் எரிப்பு:ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் துருப்பினர் ஒரு இராணுவ முகாமில் தவறுதலாக இஸ்லாமிய புனித நூல்களை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது பத்துபேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காபூலின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு அமெரிக்க படைத்தளத்தின் முன்னர் குவிந்த கோபாவேசமான ஆர்ப்பாட்டக் கூட்டத்தினர் அமெரிக்கா ஒழிக, ஒபாமா ஒழிக போன்ற கோஷங்களை எழுப்பி அந்த படைத்தளத்தின் மீது கற்களை எறிந்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கிச் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். வாகனங்களும் சேதமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.
ஜலாலாபாதில் கூடுதல் வன்முறையுடன் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வரும் நிலையில், போராட்டக்காரகள் காபூலில் இருந்து ஜலாலபாதுக்கு போகும் பாதையை மறித்துள்ளனர்.
அங்கு தாலிபான்களுக்கு ஆதரவான கோஷங்களை மக்கள் எழுப்பியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தாங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குரான் உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியது.
அந்தப் புத்தகங்கள் மூலம் தமக்கிடையே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் செய்திகளை பரிமாறிக் கொண்டனர் என்று அமெரிக்கர்கள் நம்பியுள்ளனர்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்களில் அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், குரானை எரிக்க அமெரிக்கப் படையினர் எப்படி அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை பல ஆப்கானியர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

Monday, February 20, 2012

நீங்கள் +2 / SSLC படிப்பவரா?


நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?… அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.
இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?. நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவை இல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்களை எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.

உங்களுக்கு இன்னும் சில தினங்களில் [சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாங்கத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ‘ ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” அல்லது “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது… எனவே…படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.

உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்கலாம்.பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை.

சரியான ஆட்களிடம் உங்கள் ஆலோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதி, காமராஜ் எல்லோரும் படிக்கவில்லை அவர்கள் முன்னேற வில்லையா என்றும் “தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கலியே” [இவர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ள மாட்டிக் கொண்ட விஞ்ஞானி நம்ம தாமஸு, மற்றபடி பல்ப் பீஸ் போயிட்டா கூட இவனுகளுக்கு அதை மாத்த தெரியாது] இதுபோல் வெட்டித்தத்துவம் பேசுபவர்கள் நிறைய பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் என்ன படிக்கலாம் என ஐடியா கேட்பது நோய்க்கு வக்கீலை பார்ப்பதற்க்கு சமம்.

Get the right advice from the right people, not the wrong advice from wrong people.

VISUALISATION
உங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை (Mark sheet) வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேருக்கு மாற்றாக அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள். இதைப் பார்க்க பார்க்க உங்கள் அவேர்னஸ் லெவல் அதிகரிக்கும்.

நான் எழுதியிருக்கும் இந்த Visualisation Technique சிறந்த ரிசல்ட் தருவதற்கு மிக முக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் இது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை.

உங்களின் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களை இந்த பரீட்சை சமயத்திலாவது பட்டியலிடுங்கள்.

உதாரணமாக:

1) இன்டர்னெட்டில் தேவையில்லாமல் சாட்டிங், பிளாக்கரில் பிரபலமாக கண்டதையும் எழுதுவது, ஃபேஸ் புக் இது போன்ற ‘மட்டையடிக்கிற’ விசயங்கள்.

2) சாயங்காலம் கூடும் டீக்கடை, சலூன் வாசல், குளக்கரை மேடு, ஏரிக்கரை ஓரம், தேசிய விருதுக்கு தயாராவது போன்ற பில்டப் கொடுக்கும் விளையாட்டு மைதானங்கள்.

3) உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் அமெரிக்காவிலும், லண்டனிலும், துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக் கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் ‘வடிவேலுகள்’. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாறிடும்.

4) செல்போனில் வெட்டியாக பேசி வா மாப்லே, படிச்சி என்ன ப்ரொஃபொசரா ஆகப்போறெ…வா வா மோட்டார் சைக்கிள்ளதான் ஒரு 1/2 மணி நேரந்தான் பட்டுக்கோட்டை வரை போயிட்டு கொண்டு வந்து உன் வீட்டு வாசலில் விடுறது என் பொறுப்பு போதுமா என அழைக்கும் ‘மொபைல் சைத்தான் மாப்ளைங்க’ அவன் மோட்டார் சைக்கிளில் வந்தோமே என்பதற்கு நீங்கள் செட் லன்ச்சுக்கும், கூல் ட்ரிங்க்ஸுக்கும் செலவழித்த காசை கணக்கு செய்தால் மவுன்ட் ரோட்டில் பில்டிங் வாங்களாம்.
ஆனால் அந்த காசை சம்பாதிக்க உங்கள் தகப்பனோ, காக்காவோ வெளிநாட்டில் படும் எந்த கஷ்டமும் உங்கள் கவனத்துக்கே வருவதில்லை என்பது நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது பார்க்கும் அதிசயம்.

5) மச்சான் வர்ராப்லெ, மாமா வர்ராக என திருச்சிக்கும், சென்னைக்கும் ஏர்போர்ட்டுக்கும் செல்லும் காரில் “ரிசிவ்” பண்ணப்போறேன் என்பதை ஏதோ ஜனாபதி கையால் பதக்கம் வாங்கப் போகிறேன் என்பதுபோல் சொல்லி உங்கள் நல்ல எதிர்காலத்தை ‘சென்ட் -ஆஃப்’செய்து விடாதீர்கள்.[ போனவங்களுக்கு வரத்தெரியாதா?].

மேற்கண்ட தடையை பட்டியலிட்ட பிறகு கவனமாக இருங்கள் இவை எல்லாம் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் விசயம் & தடைகள்.

என்டர்டெயின்மென்ட் எல்லாம் தவறல்ல… ஆனால், பரீட்சைக்கு பக்கத்தில் மாபெரும் தவறு..
பரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத் தேர்வுகள், அப்ளிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடத் துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை… ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்.

நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சவூதியில் பொறியியல் படித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு…




சவூதி, பிப்ரவரி 20 : சவூதி அரேபியாவில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. அதில் BE- ELECTRICAL, MECHANICAL, CIVIL ENGINEER இவைகளில் BE படித்தவர்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மாத சம்பளம் சவுதி ரியால், 42 ,000 முதல் 70 ,000 வரை தங்க இடம், உணவு முற்றிலும் இலவசம். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 21 ,22 பிப்ரவரி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் சென்னை : 72005 00225.

Sunday, February 19, 2012

துபாயில் நேற்று தீ விபத்து



Add caption

துபாய் 19-02-2012
    
துபாய் கிரீக்கில் நேற்று(18-02-2012) துபையிலிருந்து பாகிஸ்தான் செல்லவதற்காக நிருத்திவைக்கப்பட்டுயிருந்த. சரக்கு கப்பல்களில் நடந்த தீ விபத்தில் நான்கு          
கப்பல்கள் எரிந்து நாசமாயின இதில் ஒருவருக்கு காயம் ஏற்ப்பட்டு துபாய் ரசிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் நிலைமை நன்றாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்
தற்போது அவர் நிலைமை நன்றாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Thursday, February 16, 2012

துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் ரத்ததான முகாம்


துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் 15.02.2012 புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைப்பெற்றது . இதில் பலர் கலந்து கொண்டனர்.

Blogger Wordpress Gadgets